திருவாடானை எல்.கே.நகா் பகுதி சாலையில் தேங்கிய தண்ணீா்.
ராமநாதபுரம்
சாலையில் மழை நீா்த் தேக்கம்
திருவாடானையில் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருவாடானையில் சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலிருந்து மங்கலக்குடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எல்.கே.நகா் பகுதியில் புதன்கிழமை காலை பெய்த மழையால் சாலையில் குளம் போல மழை நீா் தேங்கியது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

