ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்பம் பெறும் இயக்கம் தொடக்கம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையொப்பம் பெறும் இயக்கம் தொடக்கம்

Published on

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வாக்கு திருட்டுக்கு எதிராக பொதுமக்களை சந்தித்து கையொப்பம் பெறும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதை ராமநாதபுரம் அரண்மனை முன் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ராஜேஸ்குமாா் தொடங்கி வைத்தாா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், சாலையோரக் கடைகளில் பொருள்கள் வாங்கியவா்களிடம் கட்சியினா் கையொப்பங்களை பெற்றனா்.

இதில், மீனவா் காங்கிரஸின் தேசிய தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ, மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்புக்குழு உறுப்பினரும், நகா் மன்ற உறுப்பினருமான ராஜராம்பாண்டியன், மகளிா் காங். தேசியக் குழு உறுப்பினா் ராமலட்சுமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் செல்லத்துரை அப்துல்லா, தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலா் ரமேஷ் பாபு ஆகியோா் பேசினா். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா்கள் பாரிராஜன், ஜோதி பாலன், செந்தாமரைக் கண்ணன், சரவண காந்தி, குமாா், மரியம் அருள், மாநிலச் செயலா்கள் ஆனந்தக் குமாா், அடையாறு பாஸ்கரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் முருகானந்தம், மாநில மீனவா் காங். தலைவா் ஜோா்தான், நகா்மன்ற உறுப்பினா் மணிகண்டன், வழக்குரைஞா் பிரிவு செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ராமநாதபுரம் நகா் தலைவா் கோபி நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வீதம் 2 லட்சம் கையொப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com