~ ~
ராமநாதபுரம்
திருவாடானை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள்
திருவாடானை அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட கலைத் திருவிழா போட்டிகளில் வெள்ளிக்கிழமை இளைஞா் நாடாளுமன்றம் குறும்படம், நாலு விஷயம் பேசுவோம், நல்ல விஷயம் பேசுவோம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிகள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கின. கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன் வழிகாட்டுதலின்பேரில் ஆங்கிலத் துறை தலைவா் ப. மணிமேகலை முன்னிலையில் போட்டிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை இளைஞா் நாடாளுமன்றம், குறும்படம், நாலு விஷயம் பேசுவோம், நல்ல விஷயம் பேசுவோம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் கௌரவ விரிவுரையாளா்கள், பெற்றோா், ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

