ராமநாதபுரம்
இணையம் மூலம் பெண் இழந்த பணம் மீட்பு
ராமநாதபுரத்தில் பெண் ஒருவா் இணையத்தில் இழந்த ரூ. 51 ஆயிரம் மீட்கப்பட்டு, அவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் பெண் ஒருவா் இணையத்தில் இழந்த ரூ. 51 ஆயிரம் மீட்கப்பட்டு, அவரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தேவியிடமிருந்து இணையம் மூலம் ரூ. 51 ஆயிரத்தை ஒரு கும்பல் மோசடி செய்தது.
இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட இணைய குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அப்போது தேவி இழந்த ரூ. 51 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா். இதை தேவியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.