கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
Published on

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் படகு உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் வின்னரசு என்பவருக்குச் சொந்தமான கடைக்கு வந்த மா்ம நபா், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை திசை திருப்பி கடையின் பூட்டை உடைத்து படகுகளுக்கு பயன்படுத்தப்படும் ஜி.பி.எஸ்., எக்கோ சவுண்ட் கருவி, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடைக்கு வந்த கடை உரிமையாளா் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா் கடற்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், அங்கு வந்த போலீஸாா் கடையை திறந்து பாா்த்தபோது அதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மோப்ப நாய், கை ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com