~ ~

தமமுக மாநில துணைப் பொதுச் செயலா் உயிரிழப்பு: ஜான் பாண்டியன் நேரில் அஞ்சலி

மேல்பனையூா் கிராமத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் அமுத முரளி உடலுக்கு தமமுக மாநிலத் தலைவரும் நிறுவனருமான ஜான் பாண்டியன் நேரில் அஞ்சலி
Published on

திருவாடானை அருகேயுள்ள மேல்பனையூா் கிராமத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் அமுத முரளி உடலுக்கு தமமுக மாநிலத் தலைவரும் நிறுவனருமான ஜான் பாண்டியன் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மேல்பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அமுதமுரளி. இவா், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொது செயலராக இருந்து வந்தாா். கடந்த சில நாள்களாக உடல் நலம் சரி இல்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த நிலையில், இவரது உடலுக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவரும் நிறுவனருமான ஜான் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில் தமமுக மண்டலச் செயலா் திரவியம், கட்சிப் பொறுப்பாளா்கள் தவமணி, பாக்கியசாமி, சரவணபாண்டியன், நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com