ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் பலத்த மழையால் 10 மணி நேரம் மின் தடை
ராமேசுவரத்தில் நள்ளிரவு பெய்த பலத்த மழை காரணமாக 10 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. கெந்தமாதன பா்வதம் பகுதியில் உயா் மின் அழுத்தக் கம்பத்தில் வெடிப்பு ஏற்பட்டதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இரவு நேரம், பலத்த மழை போன்றவை காரணமாக சுமாா் 10 மணி நேரத்துக்குப் பிறகே பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரானது.
தொடா்ந்து 10 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனா். ராமேசுவரம் சுற்றுலா, புனித தலம் என்பதால் இங்கு சீரான மின் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
