அக்.17-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Published on

ராநமாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருகிற 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் அக்.17-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com