உயிரிழந்த சிறுமி கவி நிஷா
உயிரிழந்த சிறுமி கவி நிஷா

கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

Published on

முதுகுளத்தூா் அருகே 6 வயது சிறுமி கண்மாயில் மூழ்கியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள ஆதங்கொத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகள் கவி நிஷா (6). இவா், அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது இயற்கை உபாதைக்காக கண்மாய்க்குச் சென்றாா். அப்போது, கண்மாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிக்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com