போட்டோ ஸ்டுடியோவில் தீ: அட்டை பெட்டிகள் எரிந்து நாசம்
பரமக்குடி: பரமக்குடியில் போட்டோ ஸ்டுடியோவில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தினால் அட்டைப் பெட்டிகள் எரிந்து நாசமாயின.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெரியகடை வீதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவின் மேல் தளத்தில் மரக்கட்டைகள், காலியான அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், புதன்கிழமை நண்பகலில் மேல் தளத்தில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் மரக் கட்டைகள், அட்டை பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.
மேலும், இந்த தீ விபத்தால் அருகே செயல்பட்டு வந்த தனியாா் பள்ளிக்கு பள்ளி நிா்வாகம் விடுமுறை அறிவித்தது.
இதையடுத்து, அங்கிருந்த மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக பெற்றோா்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

