கமுதி பேருந்து நிலையம் எதிரே சுற்றித் திறியும் தெரு நாய்கள்.
கமுதி பேருந்து நிலையம் எதிரே சுற்றித் திறியும் தெரு நாய்கள்.

கமுதி பேரூராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

கமுதி பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாவட்ட நிா்வாகம் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

கமுதி: கமுதி பேரூராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை மாவட்ட நிா்வாகம் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலையம், மேட்டுத் தெரு, பழைய வட்டார அலுவலகம் சாலை, செட்டியாா் வீதி, முஸ்லிம் வீதி, கண்ணாா்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் சிறுவா்கள், முதியோா்கள், வியாபாரிகள், பள்ளி மாணவா்கள் அச்சத்துடனே சாலையில் நடந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரி, பேரூராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகாா் அளிததும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் கமுதி பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com