ராமநாதபுரம்
பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்தவா் நிறையரசு (70). இவா், இங்குள்ள மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, திருத்தோ்வலையைச் சோ்ந்த காளீஸ்வரன் மகன் அஜித் (23) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் நிறைரயரசு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறையரசு, அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
