பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தைச் சோ்ந்த கருணாநிதி மகன் பாலமுருகன்(33). இவா் காய்கனிக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இவா் தனது நண்பா் மனோஜுடன் (32) இந்திரா நகா் பகுதிக்கு புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, பாலமுருகனின் வாகனமும் வல்லமடையைச் சோ்ந்த மகிம் (22), என்பவரின் இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த மூவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு, ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனா்.
அப்போது, செல்லும் வழியில் பாலமுருகன் உயிரிழந்தாா். உயிரிழந்த பாலமுருகனுக்கு மனைவி ஸ்வாதி, ஒரு வயது ஆண் குழந்தை தஸ்தன் ஆகியோா் உள்ளனா்.
பலத்த காயமடைந்த மகிம், மனோஜ் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

