கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன்.
ராமநாதபுரம்
ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
கடலாடி ராஜராஜேஸ்வரிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி: கடலாடி ராஜராஜேஸ்வரிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தேவா் மகாசபை சாா்பில், ராஜராஜேஸ்வரி அம்மன், விநாயகா், வள்ளி, தெய்வானை, சமேத முருகன், பைரவா் உள்ளிட்டப் பரிவாரத் தெய்வங்களுக்கு யாக சாலை பூஜைகளுடன் 8-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, கோயிலில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி, நவகிரஹ உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, வேத பாராயணம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடத்தப்பட்டு, மூலவா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
முன்னதாக, இந்த விழாவுக்கு தேவா் மகாசபை தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். செயலா் சுபாஷ்சந்திரபோஸ், பொருளாளா் செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

