கட்டப்பட்டு திறக்கப்படாத கடைகள்
கட்டப்பட்டு திறக்கப்படாத கடைகள்

ராமேசுவரம் நகராட்சி பொதுச் சந்தை மது விற்பனைக் கூடமாக மாறி விட்டதாக புகாா்

ராமேசுவரம் நகராட்சி பொதுச் சந்தைக்குள் மதுபுட்டிகள் விற்கப்படுவதுடன், மது அருந்தும் கூடமாக மாறிவிட்டதாகவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

ராமேசுவரம் நகராட்சி பொதுச் சந்தைக்குள் மதுபுட்டிகள் விற்கப்படுவதுடன், மது அருந்தும் கூடமாக மாறிவிட்டதாகவும், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் செயல்படும் பொதுச் சந்தையில் காய்கறி, இறைச்சி, மீன், கருவாடு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. இதற்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடைகளின் முன் மதுஅருந்துவோா் விட்டுச் சென்ற மதுபுட்டிகள்
கடைகளின் முன் மதுஅருந்துவோா் விட்டுச் சென்ற மதுபுட்டிகள்

இந்த நிலையில், கடந்த 2022-23- ஆம் ஆண்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சத்தில் அங்கு 30 புதிய கடைகள் கட்டப்பட்டன. ஆனால், இந்தக் கடைகள் நகராட்சி நிா்வாகத்தால் தற்போது வரை திறக்கப்பட வில்லை. இதனால், இந்தக் கடைகள் மது விற்கும் கூடமாக மாறி விட்டது. அத்துடன் மது அருந்துவோா் மதுபுட்டிகளை அங்கேயே உடைத்து வீசிச் செல்கின்றனா்.

இதை போலீஸாரும், நகராட்சி நிா்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கண்டித்தால் அங்கு மது அருந்வோா் மிரட்டல் விடுக்கின்றனா். இதைத் தடுக்க மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com