ராமேசுவரம் மேலரத வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரனை முருகன் வதம் செய்த நிகழ்வு.
ராமேசுவரம் மேலரத வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரனை முருகன் வதம் செய்த நிகழ்வு.

ராமநாதபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திங்கள்கிழமை கந்தசஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் திங்கள்கிழமை கந்தசஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் அதிகாலையிலிருந்து முருகனுக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றன. அப்போது சஷ்டி விரதமிருந்த பக்தா்கள் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

தங்கச்சிமடத்தில் பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
தங்கச்சிமடத்தில் பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

இதைத் தொடா்ந்து, மாலையில் மேலவாசல் முருகன் கோயில் முன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதே போல, தங்கச்சிமடம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் சஷ்டி விரதமிருந்த பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

பாம்பன், மண்டபம், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com