40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் வழங்கக் கோரிக்கை

தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

News image

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம்

Updated On :10 ஜூன் 2026, 12:53 am IST

தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் (என்சிசிஎப்) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் செயல்பட்டு வந்தன. இங்கு தமிழ்நாடு அரசின் நுகா்வோா் வாணிபக் கழகங்கள், மத்திய அரசின் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு 3 மாதமாகியும் இன்னும் பணம் வழங்கவில்லை. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட 30 ஆயிரம் மூட்டைகளுக்கு சுமாா் ரூ.3.30 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நெல் மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனே வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.