தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அம்மா மருந்தகங்களை வியாழக்கிழமை திறந்துவைத்தும், அரசு புதிய பேருந்துகளை துவக்கிவைத்ததையும் வரவேற்று, காரைக்குடியில் சிவகங்கை எம்.பி தலைமையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சுப்பிரமணியபுரம் ஆரியபவன் அருகில் அம்மா மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்த தையடுத்து, சிவகங்கை மக்களவை உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட பாம்கோ தலைவர் கே.கே.உமாதேவன், காரைக்குடி நகர்மன்றத்தலைவர் கற்பகம் இளங்கோ, ஒன்றியக்குழுத் தலைவர்கள் சுப்பிரமணியன், அசோகன், பாம்கோ இயக்குநர் ஏவி. நாகராஜன், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் சோ. மெய்யப்பன் மற்றும் இயல்தாகூர், அதிமுகவினர் அம்மா மருந்தகத்திற்கு வந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் ஜெயராமன், நிர்வாக அலுவலர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அம்மா மருந்தகத்தில் அலோபதி மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக காரைக்குடி மண்டல அலுவலகத்தில் 17 புதிய பேருந்துகளையும் முதல்வர் இயக்கிவைத்தார். அங்கு அதிமுகவினர் ஓட்டுநர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொதுமேலாளர் பாலகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.