சிவகங்கையில் தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு, கலால் மற்றும் ஆயத்தீர்வை, மருத்துவத்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை ஆகியவை சார்பில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப் பேரணி யை மதுவிலக்குப்பிரிவு ஏடிஎஸ்பி தமிழ்ச்செல்வம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் செந்தில்வேல்முருகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் கொண்ட அட்டை களை மாணவ, மாணவிகள் கையில் ஏந்திச் சென்றனர். பேரணியில் டி.எஸ்.பி மோகன்ராஜ், மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் முருகையன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறையினர், பள்ளி ஆசிரியர்கள் பலரும் பங்கேற்றனர்.
பேரணி அரண்மனை வாயிலில் தொடங்கி, பஸ்நிலையம், நேரு பஜார், காந்திவீதி, வாரச்சந்தை சாலை வழியாக மீண்டும் அரண்மனை வாயிலை அடைந்து அங்கு நிறை வடைந்தது.