தேவகோட்டை, செப். 23: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் விஸ்காம் அறிமுகம் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை வகித்தார். கோவிலூர் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குமரப்பன், ஊடகவியல் வளர்ச்சி பற்றி விவரித்தார். முன்னாள் பிலிம் இன்ஸ்டியூட் ஊடகத்துறை பேராசிரியர் பாபு சீனிவாசன், எடிட்டர் அருண் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய பாபு சீனிவாசன் ஊடகத்துறை மூலம் இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்து, வேலை வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள இத்தகைய கருத்தரங்கம் அவசியம் என தெரிவித்தார்.