Enable Javscript for better performance
காரைக்குடியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

    Published on : 27th March 2014 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடியில் ஜனநாய முற்போக்குக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

      இப்போது நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல். தமிழகத்தில் ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் முற்போக்குக் கூட்டணியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் போன்றோரை பாதுகாக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி அமைத்துள்ளார்.

      இக்கூட்டணியில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போகும் தன்மையுள்ள பண் பாளர்களாக தலைவர்கள் உள்ளனர். ஆனால் பா.ஜ.க தலைமையில் உள்ள கட்சிகள் தேமுதிக, மதிமுக, பா.ம.க போன்ற கட்சிகளில் கருத்து வேறுபாடுகளைக் கொண்ட தலைவர்களே உள்ளனர்.

     அதிமுக வலுவிழந்த உதிரிக்கட்சிக் கூட்டணியாக உள்ளது. அக்கூட்டணியில் சட்டபேரவைத் தேர்தலில் உள்ள கட்சிகள் விரட்டி அடிக்கப்பட்டு விட்டன.

       இதில் கம்யூனிஸ்ட்கள் அவமானப்படுத்தப்பட்டுவிட்டனர். கூட்டணி சேரவே கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் கட்சியும் தனியாக போட்டியிடுகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுவிட்டது.

      இப்படிப்பட்ட நிலையில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பா ளர்களில், அரசியல் பாரம்பரியமிக்க வேட்பாளராக சுப. துரைராஜை திமுக தலைவர் கருணாநிதி நிறுத்தியுள்ளார்.

     அவரது தந்தை பி. சுப்பையா அம்பலம் 1957-ஆம் ஆண்டில் நேரு பிரதமராக இருந்தபோது சிவகங்கைத் தொகுதியின் எம்.பியாக பணியாற்றியவர்.  எனவே ஏதோ இங்கு கூட்டம் கூடிவிட்டது. நாம் வெற்றிபெற்றுவிடலாம் என்று இருந் துவிடாமல் செயல்வீரர்கள், வீராங்கனைகள் தாங்கள் ஒவ்வொருவரும் தினமும் பல வாக்காளர்களை சந்தித்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வாக்குகள் சேகரிக்கவேண்டும்.

      ஒரு மாதம் உறக்கத்தையும், ஓய்வையும் கருதாமல் பணியாற்ற வேண்டும். திமுக வேட்பாளர் சுப. துரைராஜ் வெற்றிபெற்றதை திமுக தலைவர் கருணாநிதியிடம் சமர்ப்பிக்கும் வகையில் திமுகவினரும், கூட்டணியினரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

      கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, திமுக வேட்பாளர் சுப. துரைராஜ்,  சிவகங்கை மாவட்ட திமுகவினர், நகர திமுகவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai