Enable Javscript for better performance
தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு - Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலகம் காரைக்குடியில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

     இக்கூட்டணி சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக எச். ராஜா போட்டியிடுகிறார். இதையடுத்து தொகுதியில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

     காரைக்குடி அருணா நகரில் தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் அலுவலகத்தை எச். ராஜா திறந்துவைத்தார்.

      இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில செயலாளர் விஆர்வி. முத்துலெட்சுமி, சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பி. எம். ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் குரு. நாகராஜன், மாவட்ட அமைப்புச் செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், காரைக்குடி நகரத் தலைவர் ஏ. நாகராஜன், தேமுதிக மாவட்டச் செயலாளர் திருவேங்கடம், அருணாகண்ணன், மதிமுக சேது. தியாக ராஜன், ஐ.ஜே.கே. ராமன், பா.ம.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai