Enable Javscript for better performance
தேவகோட்டையில் மதுரை ஆதீனம் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை அண்ணா அரங்கத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதனை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது:

     இன்று பல கட்சிகளில் பல கோஷ்டிகளாக உள்ளனர். அதிமுக மட்டும்தான் ஒரே தலைமையை கொண்ட கட்சி. அம்மா ஆட்சி மக்கள் ஆட்சி. இவர்களுக்கு மக்கள் தான் எல்லா சொத்து, சொந்தம், பந்தம். அம்மாவிடம், அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போகிறேன் என்று சொன்னபோது சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டார். தேவனுடையை கோட்டையில் ஆரம்பித்து தமிழகம் எங்கும் பிரசாரம் செய்யப் போகிறேன்.  மத்தியில் ஆளும் கட்சியால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்கிறது.

     இதனால் பணக்காரர்கள் கஷ்டப்படப் போவதில்லை. ஏழை கூலித் தொழிலாளிதான் கஷ்டப்படுகிறான். ஜெயலலிதா பிரதமராக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.  இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சொர்ணலிங்கம், கற்பகம் இளங்கோ, மாவட்ட இளைஞர் அணிச் செயலர் தேர்போகி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai