Enable Javscript for better performance
நெடுஞ்சாலைத்துறை சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

      தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராமகிருஷ்ணன், திருநெல்வேலி கோட்டங்களில் பணி நடைபெற்ற சாலைகளில் ஆய்வு செய்யும் போது பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கூட்டமைப்பின் அமைப்பாளர் மோகனின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யவேண்டும். பொள்ளாச்சி கோட்டத்தில் முழுவதும் சாலை பராமரிப்பை தனியாருக்குக் கொடுத்ததை வாபஸ் பெற்று அரசே ஏற்று நடத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.  நெடுஞ்சாலைத்துறை கோட்ட கணக்கர் சங்க மாநில பொருளாளர் மணிவண்ணன், ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பழனி செல்வம், பொருளாளர் முரளி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் மெய்யப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

      ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், சாலைப்பணியாளர்  சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பி. பிச்சை நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai