Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

      சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 9,857 மாணவ, மாணவியர் களும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 39 தேர்வு மையங்களில் 11,445 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 72 தேர்வு மையங்களில் 21,302 மாணவ, மாணவியர் கள் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். புதன்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

      இதில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

     தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், குடிநீர் வசதி, மின் வசதி தடையின்றி உள்ளதா என்பன குறித்தும் ஆய்வு செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai