Enable Javscript for better performance
மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்: சி.இ.ஓ. முயற்சியால் தேர்வு எழுத அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்: சி.இ.ஓ. முயற்சியால் தேர்வு எழுத அனுமதி

    Published on : 27th March 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.

    கல்வி மற்றும் வருவாய் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முயற்சியால் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு புதன்கிழமை துவங்கியதைத் தொடர்ந்து சிவகங்கை அரசு உதவிபெறும் பள்ளியான மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கள் தேர்வு எழுதினர்.

     இதில் 10 ஆம் வகுப்பு பி பிரிவைச் சேர்ந்த ஆனந்தகுமார் (சிவகங்கை அருகே உள்ள ராணியூர் கிராமம்), சுரேஷ்குமார் (பொன்னாகுளம்), நவீன்குமார் (காமராஜர் காலனி), மணிகண்டபிரபு (சின்ன ஆவரங்காடு),  சுதாகர் (நயித்தான்பட்டி), நவநீதகிருஷ்ணன், (சக்கந்தி மில்கேட்), தினேஷ் (காஞ்சிரங்கால்), பாலமுருகன் (முத்துப்பட்டி), அரவிந்த்குமார் ஆகிய 9 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்படவில்லையாம்.இந்த நிலையில் தேர்வுக்கூட மையத்துக்கு வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.எனவே செய்வதறியாது தவித்த மாணவர்கள் தேர்வு மையத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

    இதையறிந்த செய்தியாளர்கள், மாணவர்களின் நிலைகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனுக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், கோட்டாட்சியர் பிச்சப்பா, வட்டாட்சியர் கங்காதேவி ஆகியோர் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். உடனடியாக பள்ளிக்குச் சென்ற இக் குழுவினர் ஹால் டிக்கெட் வழங்காதது குறித்து நிர்வாகத்திடமும், வகுப்பு ஆசிரியர் கஜேந்திரன், பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும்   நேரடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது வகுப்புக்கு தினமும் வந்தபோதும் வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் போட்டுள்ளதும், டிசம்பர் மாதத்திலிருந்து வருகைப் பதிவேடு எடுக்கும்போது தங்களது பெயர்களை அழைப்பதில்லை என மாணவர்கள் தெரிவித்தனராம். மேலும், அறிவியல் செய்முறை தேர்வு எழுதும்போதும், உரிய பதிவு எண் கொடுக்கவில்லை என்றும், திருப்புதல் தேர்வு எழுதியும் எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என 6 மாணவர்களும் தெரிவித்தனர்.இதற்கு மறுப்புத் தெரிவித்த வகுப்பாசிரியர் மாணவர்கள் அனைவரும் வகுப்புக்கே வரு வதில்லை என்பதால், வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர்களை நீக்கிவிட்டதாகக் கூறினார்.வருவாய்த் துறை மற்றும் கல்வித்துறையினர் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்ததில், டிசம்பர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட 9 மாணவர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந் தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் முயற்சியால், இரண்டு மணிநேரம் தாமததத்துக்குப் பின் ஆனந்தகுமார் உள்ளிட்ட 6 மாணவர்கள் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai