Enable Javscript for better performance
மானாமதுரையில் தீக்காயமடைந்த கர்ப்பிணி சாவு- Dinamani

சுடச்சுட

    

    நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் தீ வைத்ததில் கருகி கர்ப்பிணி மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இளையான்குடி அருகே பெரும்பச்சேரி காந்திஜி காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவரது மனைவி நாகலெட்சுமி (22). இவர்களுக்கு 7 மாதங்களுக்கு முன் திருமணமாகியது. நாகலெட்சுமி கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இவரது நடத்தையில் சந்தேகமடைந்து சீனிவாசன் அடிக்கடி மனைவி நாகலெட்சுமியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

     கடந்த 17ஆம் தேதி சீனிவாசன் நாகலெட்சுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தாராம். அதன்பின் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

     இச்சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி சீனிவாசன் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த நாகலெட்சுமியும் சிகிச்சை பலனின்றி  செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

     இளையான்குடி போலீôர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai