Enable Javscript for better performance
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏழு நாள்கள் நடக்கும் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலமாக சுற்றி வருவர். தினமும் மதியம் கோயிலில் அன்னதானம் நடைபெறும்.           எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.1) ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.  அன்று பக்தர்கள் ஆயிரம் கண் பானை எடுத்தல், கரும்பால் தொட்டி கட்டுதல், கை கால் போன்ற உருவ பொம்மைகள் செய்து வைத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதனைத் தொடர்ந்து இரவு அம்மனுக்கு பொங்கலிட்டு கூட்டுப் பிரார்த்தனை  வழிபாடு நடத்துகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai