Enable Javscript for better performance
வெடி பொருளுடன் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர் அருகே ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

     சிவகங்கை மாவட்டம், ஆந்திரம்பட்டி பழனியப்பன் என்பவரது தோட்டத்தில், டிராக்டரில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெற்குப்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.

     இதையடுத்து பழனியப்பன் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்ட நெற்குப்பை ஆய்வாளர் முருகதாஸ், 30 ஜெலட்டின் குச்சிகள், 15 டெட்டனேட்டர்களை கைப்பற்றினார்.   

      தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடம்பூர் ஆத்தூரைச் சேர்ந்த பழனிமுத்து என்பவரிடமிருந்து, கிணறு தோண்டுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. அதனையடுத்து பழனிமுத்து கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai