Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த 10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தனது நண்பருக்காக தேர்வெழுதியவரை போலீஸார் கைது செய்தனர்.

     மானாமதுரை பைபாஸ்ரோட்டில் உள்ள குட்வில் மெட்ரிக் பள்ளியில் 10ஆம் வகுப்புக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

      மானாமதுரை சுற்றுவட்டார பள்ளிகளைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 271 பேர் மேற்கண்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர்.

      தேர்வு நடந்து கொண்டிருந்தபோது ஒரு தேர்வு அறையில் பறக்கும்படை அலுவலர் அப்துல்முகமது மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை சோதனை செய்தார்.

      அப்போது மானாமதுரை அருகேயுள்ள மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த கீழநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாணவருக்குப் பதில் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் அலெக்ஸ் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

     அதைத்தொடர்ந்து இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது தனது நண்பர் திருநாவுக்கரசு கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லவில்லை.

     அதனால் அவருக்குப்பதில் தான் தேர்வு எழுத வந்ததாக அலெக்ஸ் கூறினார்.

       அதையடுத்து மானாமதுரை காவல் நிலையத்தில் அலெக்ஸ் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் வழக்குப் பதிந்து அலெக்சை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai