Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

     ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அமைப்பாளர்கள், சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காவரையற்ற வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை அரண்மனை வாசலில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் குமரேசன் தொடங்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் பாண்டி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் மெய்யப்பன் முடித்து வைத்தார்.

      இதில் தேவகோட்டை, சாக்கோட்டை, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai