Enable Javscript for better performance
தேவகோட்டை- திருப்பத்தூர் சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை- திருப்பத்தூர் சாலையில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

    By தேவகோட்டை  |   Published on : 17th April 2015 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

     தேவகோட்டையில் கடந்த 3 நாள்களாக இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கடுத்து ஓடியது. இந்நிலையில் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

      இந்த பகுதியில் பள்ளிகள், மண்ணெண்ணெய் விநியோகிக்கும் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியவை அமைந்துள்ளன. மழைநீர் தேங்கியதால் பயணிகள் பேருந்தில் ஏற இறங்க மிகவும் சிரமமடைந்தனர்.

      மேலும் சாலை திரும்பும் இடத்தில் பள்ளம் இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai