Enable Javscript for better performance
மனைவியை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மனைவியை வெட்டிக் கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி

    By தேவகோட்டை  |   Published on : 17th April 2015 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை வட்டம் வனங்காவயலில்  மனைவியை வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவர் மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     தேவகோட்டை வட்டம் வனங்காவயலைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவரது மனைவி பாண்டி மீனாள் (36). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை சரவணன், மனைவி பாண்டிமீனாளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

      இதையடுத்து காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆறாவயல் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai