Enable Javscript for better performance
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கைதான தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

    By சிவகங்கை  |   Published on : 17th April 2015 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

      சிவகங்கை மாவட்டம் பெரியநரிக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தனியார் ஆதரவற்றோர் விடுதியைச் சேர்ந்த 8 மாணவிகள் படித்து வந்தனர். இப்பள்ளியின் தலைமையாசிரியர் முருகன் (46). இவர் இங்கு படித்த மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கிராமத்தினர் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தனர்.

     இதைத் தொடர்ந்து, முருகனை போலீஸார் கைது செய்து சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த மாவட்ட நீதிபதி சந்திரா, அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தவிட்டார். முன்னதாக பாதிக்கப்பட்ட 5 மாணவிகளுக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து சிவகங்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சாராள்தேவி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

     இந்நிலையில், தலைமையாசிரியர் முருகனை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வியாழக்கிழமை மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் இவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவிடம் புகார் மனு கொடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai