Enable Javscript for better performance
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ. முற்றுகை போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூ. முற்றுகை போராட்டம்

    By சிவகங்கை  |   Published on : 17th April 2015 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.புதூர் ஒன்றியம் தர்மபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடந்தது.

     இப்பள்ளி தலைமையாசிரியர் மீது வரவு- செலவு கணக்கு காட்டாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமத்தினர் சார்பில் ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாத்துரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில்  மாவட்டச் செயலர் கந்தசாமி, ஒன்றியச் செயலர் சேதுராமன், தர்மபட்டி ஊராட்சித் தலைவர் காந்திமதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், தாலுகா காவல் ஆய்வாளர் பொன்ரகு, உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai