Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை, ஜன. 27:   நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கக் கூடாது என வலியுறுத்தி, சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ப.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் பயனடைந்தனர்.

    தற்போது பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நிதியை குறைத்து, முடக்க நினைக்கிறது என மாநில துணைத் தலைவர் எஸ்.செல்வராஜ் பேசினார். 

    ஆர்ப்பாட்டத்தில் கே.ஆர்.வி.ராஜேந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai