Enable Javscript for better performance
குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

    By காரைக்குடி  |   Published on : 28th January 2015 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி, ஜன. 27: சிவகங்கை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டுப்போட்டிகள் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

    நீச்சல், ஜூடோ, கேரம், ரோடு சைக்கிளிங் ஆகிய நான்கு புதிய வகைப் போட்டிகளில் பங்கேற்க, மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 2 ஆயிரத்து 507 மாணவ, மாணவியர்கள் காரைக்குடி வந்துள்ளனர். 155 பேர் நடுவர் பொறுப்பேற்கின்றனர்.

    காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் ஆட்சியர் பேசுகையில், விளையாட்டுக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து நிதிகளை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது.

    விளையாட்டில் ஈடுபடும் மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து பயிற்சி பெறவேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளின் வெற்றிக்காக ஊக்கப்படுத்தவேண்டும் என்றார். பின்னர் இப்பள்ளி வளாகத்தில் நீச்சல் போட்டியினை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் ஜூடோ விளையாட்டுப் போட்டியும், புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேரம் விளையாட்டும், காரைக்குடி அழகப்பாபுரம் முதல் ஸ்ரீ ராம்நகர் வரை ரோடு சைக்கிளிங் போட்டியும் நடைபெறவுள்ளன.

    துவக்க விழாவில், காரைக்குடி நகர்மன்றத்தலைவர் கற்பகம் இளங்கோ, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) நல்லமுகமது, மண்டல முதுநிலை மேலாளர் வால்வீமராஜா, சென்னை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) கலைச்செல்வன், லீடர்ஸ் மெட்ரிக் பள்ளி இயக்குநர் ஞானகுரு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன், காரைக்குடி வட்டாட்சியர் கருணாகரன், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) ச.பூவேந்தன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai