Enable Javscript for better performance
ஜி.கே.வாசன் செயல்பாடு நம்பிக்கைக்கு உகந்ததல்ல: சுதர்சன நாச்சியப்பன்- Dinamani

சுடச்சுட

    

    ஜி.கே.வாசன் செயல்பாடு நம்பிக்கைக்கு உகந்ததல்ல: சுதர்சன நாச்சியப்பன்

    By சிவகங்கை  |   Published on : 28th January 2015 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை, ஜன. 27: ஜி.கே.வாசன் மத்திய அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு, அதிலிருந்து வெளியேறிய செயல்பாடு நம்பிக்கைக்கு உகந்ததில்லை என மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

      சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் நூலகக் கட்டடம் கட்ட நிதி வழங்குமாறு, மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம், சிவகங்கை வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கான நிதி ரூ.50 லட்சத்தை ஒதுக்கிய  சுதர்சன நாச்சியப்பன், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற வளாகத்தில் நூலகம் அமையும் இடத்தை பார்வையிட்டார்.

    அதன் பின் அவர் கூறியது: மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக்úகோரி கோரிக்கை வைத்தோம். அதை, பாஜக எதிர்த்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம் இடையேயான பிரச்னை குடும்ப பிரச்னை, அதை நாங்கள் பார்த்து கொள்வோம். ஜி.கே.வாசன் மத்திய அமைச்சரவையில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு. அதிலிருந்து வெளியேறிய செயல்பாடு நம்பிக்கைக்கு உகந்ததில்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai