Enable Javscript for better performance
தமிழக ஆளுநர் ரோசய்யா நாளை காரைக்குடி வருகை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஆளுநர் ரோசய்யா நாளை காரைக்குடி வருகை

    By காரைக்குடி  |   Published on : 28th January 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி, ஜன. 27: தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா வியாழக்கிழமை(ஜன.29) காரைக்குடிக்கு வருகை தரவிருக்கிறார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 27-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, பட்டமளிப்பு விழா கலையரங்கில், மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இவ்விழாவில் தலைமையேற்று பட்டங்களை வழங்குவதற்காக, தமிழக ஆளுநர் ரோசய்யா, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, பின்னர் சாலை மார்க்கமாக காரைக்குடி வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆளுநர் வருகையையொட்டி, ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் வெ.மாணிக்கவாசகம் மற்றும் அதிகா ரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai