Enable Javscript for better performance
பள்ளிகளில் ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூர், ஜன. 27: திருப்பத்தூர் ஊராட்சி மார்க்கண்டேயன்பட்டி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு ஆண்டியம்பலம் தலைமை வகித்தார். கண்டவராயன்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ரெத்தினா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மண்டல சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவி பிரேமி மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பாண்டியராஜா ஆகியோருக்கு சிறப்புப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அழகுமணி, கணேசன், சுகந்தி, கோசல்ராம், மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாநில மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் இயக்குநர் ஆர். பிச்சை தலைமை வகித்தார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என். சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ராஜசேகர் பரிசுகளை வழங்கினார்.  விழாவில் பள்ளி முதல்வர் ஏ. சித்ரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    கமுதி: கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேனிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு பா.காளிமுத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை து.சேர்மன் வரவேற்றார். ஆர்.சிவலிங்கம், டாக்டர் செ.வெங்கடேசன் சிறப்புரையாற்றினர். விழாவில் சொ.உக்கிரபாண்டியன், ம.சந்திரசேகரன், எஸ்.மதன் குமார், ஞா.திலீப்குமார், ஆண்கள் மேனிலைப்பள்ளி செயலர் ம.கணேஷ், ஸ்ரீமீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்க பள்ளி செயலர் ச.பாபு செல்வக்கனி, பொருளாளர் வீ.சதீஷ் மற்றும் பலர் விழாவில் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை நே.தங்கபாய் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai