தேவகோட்டை அருகே முப்பையூரில் கிராம விவசாயிகள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் சிமியோன், செயலர் மணி, துணைத் தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகிவிட்டன. சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் இன்சூரன்சை முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில், தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.