போலி நிதி நிறுவனங்கள் குறித்து சிவகங்கை ரயில் நிலையத்தில் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
அப்போது, குறும்படம் மூலமும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஷ்வரி தலைமையில், சார்பு ஆய்வாளர் ராணிமுத்து உள்ளிட்ட போலீஸார் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை செய்தனர்.