Enable Javscript for better performance
ஆதார் அடையாள அட்டை: விடுபட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அடையாள அட்டை: விடுபட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்

    By சிவகங்கை  |   Published on : 15th April 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அடையாள அட்டை எடுக்காது விடுபட்ட ஓய்வூதியதாரர்களுக்காக அனைத்துக் கருவூலங்களிலும் ஏப். 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்காக உயர்புள்ளியியல் பண்புகளை பதிவு செய்ய ஓய்வூதியதாரர்களுக்காக சிறப்பு முகாம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களிலும் ஏப். 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

     இதுவரை ஆதார் அடையாள அட்டை எடுக்காத விடுபட்ட ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் சார்நிலைக் கருவூலங்களுக்கு ஆவணங்களுடன் சென்று ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முகாமிற்கு அருகாமையில் உள்ள பொதுமக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai