Enable Javscript for better performance
சிவகங்கை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்றும் நாளையும்அதிகமாக இருக்கும்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்றும் நாளையும்அதிகமாக இருக்கும்

    By சிவகங்கை/ராமநாதபுரம்  |   Published on : 15th April 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்த இரு நாள்களும் அனல்காற்று வீசும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து அனல்காற்று எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப். 14) முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இயல்பு நிலையிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக நீடிக்கும். இந்த வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கடுமையான வேலைகள் செய்வதையும் தவிர்க்கவும். போதுமான குடிநீர் பருக வேண்டும். வெளியே செல்லும் போது தலையில் தொப்பி மற்றும் லேசான பருத்தியினாலான ஆடை, குடை, காலணிகளையும் பயன்படுத்தலாம்.

      தேநீர், காபி, கார்பனேட் மென்பானங்கள் மற்றும் மதுபானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். மயக்கம் அல்லது வெப்ப தாக்கு நோயால் பாதிக்கப்படும் போது அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெறவும். கால்நடைகளை நிழல் பகுதியில் பராமரிக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் அனல்காற்று இடர்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்திருப்பதாவது: மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப். 15), சனிக்கிழமை (ஏப். 16) ஆகிய இருநாள்களும் வெளியிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளதால் அதற்கு ஏற்ப பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai