Enable Javscript for better performance
தமிழ் புத்தாண்டு: குன்றக்குடி சண்முகநாத பெருமானுக்கு பாலாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் புத்தாண்டு: குன்றக்குடி சண்முகநாத பெருமானுக்கு பாலாபிஷேகம்

    By காரைக்குடி  |   Published on : 15th April 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வியாழக்கிழமை குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

     அன்று காலையில், பால்குட ஊர்வலம் குன்றக்குடி ஆதீனத்தலைவர் பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. பால்குடத்துடன் மலையை வலம் வந்து திருக்கோயிலை பக்தர்கள் அடைந்தனர். அங்கு சண்முகநாதப்பெருமானுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி, காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்:திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் தமிழ்புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை முருகப் பெருமானுக்குப் பால்குட விழா நடைபெற்றது.

     கோட்டைக் கருப்பர் ஆலயத்திலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடி சாலை, நான்கு சாலை, தேரோடும் வீதி வழியாகப் பேருந்து நிலையம் அடைந்து பின்னர் திருத்தளிநாதர் ஆலயத்தை ஊர்வலம் சென்றடைந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai