Enable Javscript for better performance
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

    By திருப்பத்தூர்  |   Published on : 15th April 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

     அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் வெள்ளிப் பல்லக்கில் கோயிலிலிருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும், அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் எதிரே உள்ள குளபடித்துறைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடைபெற்று பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு கோவில் குளத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று பகல் முழுவதும் கோயில் நடை சார்த்தப்படாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திறந்து வைக்கப்பட்டிருந்தது. மாலை விநாயகர், சந்திரசேகர், கௌரியம்மன், சண்டீக்கேஷ்வரர் ஆகியோர் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

     பின்பு தமிழ்ப் புத்தாண்டையொட்டி புத்தாண்டு பஞ்சாங்கமும் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னாதனம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

     ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி ராமநாதன், காரைக்குடி தண்ணீர்மலை ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai