Enable Javscript for better performance
திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் கள்ள நோட்டு கும்பல் கைது

    By திருப்பத்தூர்  |   Published on : 29th January 2016 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வியாழக்கிழமை கடைகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

     தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தைச் சேர்ந்த 4 பேர் காரில் இரவு 7 மணிளவில் திருப்பத்தூர் மதுரை சாலையில் உள்ள ஒரு பிஸ்கட் கடையில் 1000 ரூபாய் கள்ள நோட்டினை கொடுத்து பொருள் வாங்கியுள்ளனர். அருகில் உள்ள மாடசாமி

    என்பவரது மிக்ஸர் கடையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து ரூ.80-க்குப் திண்பண்டம் வாங்கியுள்ளனர். இதேபோல் அண்ணாசிலை அருகில் உள்ள பழக்கடை ஓன்றிலும் இவ்வாறு செய்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த பிஸ்ட் கடை உரிமையாளர் சரவணன் எதிரே உள்ள ஐ.சி.ஐ.சி. வங்கியில் ரூபாயை காண்பித்து சோதனை செய்துள்ளார்.

    அந்த நோட்டு கள்ள நோட்டு என்று தெரியவரவே, உடனடியாக திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கிருந்து தப்பிய கும்பலை எஸ்.எஸ்.கோட்டை வாகன சோதனை மையத்தில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

     விசாரணையில் அவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது ஸாகிப் (27), பகுர்தீன் மகன் மீரான் முகைதீன் (32), அகமது மகன் முகமது அப்துல்லா (20), ராஜா முகமது மகன் அஜ்மல் (20) ஆகியோர் என தெரியவந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் திருப்பத்தூர் ஆய்வாளர் செங்குட்டுவன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai