Enable Javscript for better performance
கூட்டுறவு வார விழாவில் ரூ.18 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு வார விழாவில் ரூ.18 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published on : 21st November 2016 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 63-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 101 பயனாளிகளுக்கு ரூ.18,65,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.
    பின்னர் அவர் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 213 கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, 2,360 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2,440 விவசாயிகளுக்கு ரூ.15.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 30,226 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அசல் ரூ.88.35 கோடி மற்றும் வட்டி ரூ.8.37 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    உரம் மற்றும் விதைகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம் சார்ந்த பால்மாடு, ஆடு வளர்ப்பு போன்ற இனங்களுக்கு 93 நபர்களுக்கு ரூ.0.19 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2 கிளைகளுக்கு  புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 3 அம்மா மருந்தங்கள், 3 கூட்டுறவு மருந்தகங்கள் ஆக மொத்தம் 6 மருந்தகங்கள் மூலம் 15 சதவீத  தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கி முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.
    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினர் மாரியப்பன்கென்னடி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், ஆவின் பால்வள நிறுவனத் தலைவர் சண்முகம், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai