Enable Javscript for better performance
சிங்கம்புணரியில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றல்- Dinamani

சுடச்சுட

    

    சிங்கம்புணரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
        சிங்கம்புணரி பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி தெரிவித்தது:
       சிங்கம்புணரியில் காரைக்குடி சாலை, திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி, பேருந்து நிலையம் உள்புறம் என பல்வேறு இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டு ஏற்கெனவே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     எனவே அனைவரும் திங்கள்கிழமை மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் செவ்வாய்க்கிழமை பேரூராட்சி சார்பில் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அவர் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai