Enable Javscript for better performance
வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதுகாப்பு அமைப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடு செல்லும் இளைஞர்கள் பாதுகாப்பு அமைப்பு தொடக்கம்

    By DIN  |   Published on : 28th November 2016 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வெளிநாடு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கென குடிபெயர்வு தொழிலாளர் சேவை மையம் துவங்கபட்டுள்ளது.
      சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் வெளிநாடு செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இளைஞர்களின் இந்த மோகத்தை பயன்படுத்தி பல தரகர்கள் உருவாகி மருத்துவ பரிசோதனைக்கு என்று பணம் வாங்கியும் போலி விசா கொடுத்தும் பேசிய சம்பளம், கூறியபடி வேலை இல்லாமல் பலரை ஏமாற்றி விடுகின்றனர். நிலங்களை அடமானம் வைத்தும் வட்டிக்குப் பணம் வாங்கியும் பணத்தைத் தயார் செய்த இந்த இளைஞர்கள் பெரிய பாதிக்கப்படுகின்றனர்.
    இளைஞர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க தற்போது சிவகங்கை மாவட்ட குடிபெயர்வு தொழிலாளர்கள் சேவை மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் நிர்வாகி ராம் கூறுகையில், தமிழக அரசு தற்போது நடத்தி வரும் தமிழ்நாடு அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவனத்தை மாவட்ட வாரியாக விரிவுபடுத்தி கேரளத்தில் உள்ள நோர்க்கா அமைப்பைப் போல செயல்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலையும் தகுதி இழந்தவர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். மேலும் வெளிநாட்டில் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதுகுறித்து எங்கள் அமைப்பின் சார்பில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai